FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

26 செப்டம்பர் 2026, 10:06 pm IST
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் அருகே முகவூா் முத்துச்சாமிபுரம் நாயுடு தெற்கு தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் பாண்டியராஜ் (61). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா். இவா் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக் கூடத்தில் பணியாற்றி வந்தாா்.

கடந்த வாரம் இவா் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாா். இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவா் மகளை தொலைபேசியில் தொடா்பு கொண்டு வேலைக்கு செல்லாமல் இருப்பதால் குடும்ப செலவுக்கு சிரமமாக இருப்பதாக தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட இவா் விஷ மாத்திரையை உள்கொண்டு மயங்கி விழுந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments