விண்வெளிக் கூடத்தில் நாசா வளர்த்த சோளம் செடியில் நிகழ்ந்த விநோதம்!
விண்வெளிக் கூடத்தில் நாசா வளர்த்த சோளம் செடியில் நிகழ்ந்த விநோதம் பற்றி..
பூமியில் இருக்கும் புவி ஈர்ப்பு விசை இல்லாமல், செடிகள் வளர்வது குறித்து ஆய்வை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நாசாவின் விண்வெளி ஆய்வுக்கூடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சோளம் விதை, நடவு செய்யப்பட்டு, செடியாக வளர்க்கப்பட்டது.
பூமியின் ஈர்ப்பு விசை இல்லாமல், ஒரு சோள விதை வளரும்போது என்ன நடக்கும்? உலர்ந்த சோள விதைகளை விண்கலன்கள் மூலம் அனுப்பி நாசா நடத்திய சோதனைகள் மூலம் இதற்கான விடை தெரிய வந்தது.
Advertisement
Advertisement
அந்த விதைகள் சுற்றுப்பாதையில் முளைத்து, தாவரங்களும் வளர்ந்தன.
இந்த விண்வெளி ஆய்வின் மூலம், மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும் பூமிக்கு அப்பால் உணவு உற்பத்தி செய்வது குறித்த முக்கியமான ஆதாரங்களைத் திரட்ட இந்த ஆய்வு முடிவு உதவியது.
ஒரு செடி என்றால், அதன் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக கீழ்நோக்கிச் செல்லும். தண்டுப்பகுதி மேல்நோக்கி வளரும். இதனை புவிச்சார்பசைவு என்கிறார்கள். செடிகள் தாமாக வளர்ந்து பூக்களைப் பூக்கவும், காய், கனிகளைக் கொடுக்கவும் பூமியின் புவியீர்ப்பு விசை பெரிதும் உதவுகிறது.
ஆனால், விண்வெளியில், புவியீர்ப்பு விசை பலவீனமாக இருக்கும். இதனால், சோளம் செடியானது, வழக்கமாக வளர்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் செயல்பட்டன.
ஒரு நேரான மேல் மற்றும் விரிந்து பரந்த கீழ் பாதைகளில் வேர்களும் தண்டுகளும் வளராமல், அதற்குப் பதிலாக, ஏன், எப்படி என கணிக்க முடியாத திசைகளில் வளர்ந்தன.
அதாவது, வளைந்து, நெலிந்து செடிகள் எஸ் போன்ற தோற்றத்தில் எல்லாம் முளைத்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தாவரங்களால் ஈர்ப்பு விசையை உணர முடியாது. ஆனால், அதில் உள்ள சிறப்பு வாய்ந்த செல்கள் புவியீர்ப்பு விசைக்கேற்ப செடிகளை நிலைநிறுத்துகின்றன. அந்த விசைக்கேற்பவே, செடிகளின் வேர்களும் தண்டுகளும் எங்கு எவ்வாறு நோக்கி வளர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன என்பது இதன் மூலம் அறியப்பட்டுள்ளது.
இது வெறும் செடிகளை மட்டும் வளர்த்துப் பார்ப்பதற்கான ஆய்வாக இல்லாமல், விண்வெளியிலேயே செடிகளை வளர்த்தால், விஞ்ஞானிகளுக்கு காய்கறி, கனிகளை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கான தேடலாகவும் அமைந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.