FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

துப்பாக்கி கையில் எடுத்து..!

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்து வருகிறார் பள்ளி மாணவி பா.யுக்தா.

Updated On : 7 ஜூன் 2026, 4:04 am IST
பகிர்:

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்து வருகிறார் பள்ளி மாணவி பா.யுக்தா.

அவரிடம் பேசியபோது:

'ஜப்பானில் பிறந்தேன். ஆனால், பூர்விகம் திருச்சி மாவட்டம்தான். தற்போது திருச்சி, கே.கே.நகரில் வசிக்கிறோம். எனது தந்தை பாலவிநாயகம் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இல்லத்

Advertisement

Advertisement

தரசியான அம்மா தேவி அண்மையில் மறைந்தார். என்னையும், அக்காவையும் தந்தை வளர்த்து வருகிறார். ஆல்பா விஸ்டம் வித்யாஷ்ரமம் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையில் படித்தேன். தற்போது 11-ஆம் வகுப்புக்குச் செல்ல இருக்கிறேன்.

துப்பாக்கிச் சுடும் போட்டியில் சாதனை செய்த எனது அக்காவைப் பார்த்து எனக்கு ஆர்வம் வந்தது. முதலில் என் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. பின்னர் அவர்களே ஊக்குவித்தனர்.

10 மீட்டர் தூரத்தில் துப்பாக்கிச் சுடுதலில் நல்ல பயிற்சி பெற்று வருகிறேன். மாவட்ட, மாநில, தேசியப் போட்டிகளில் நிறைய பரிசுளைப் பெற்றுள்ளேன்.

வயது வரம்பு அடிப்படையில் துப்பாக்கிச் சுடும் போட்டிகள் இருக்கும். இதில் பயன்படுத்தப்படும் குண்டு முதல் 10 மீட்டர் வரை வேகமாகச் செல்லும். அதன் பின்னர் வலுவிழந்து அதனுடைய வேகம் பெரிய அளவில் குறையும். குண்டு சிறியதாக இருந்தால், காயம் ஏற்படாது என்றில்லை. அதிகமான காயங்களும் ஏற்படும்.

துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் பங்கேற்கவும், பயிற்சி பெறவும் செலவு அதிகம்தான். இந்தியத் துப்பாக்கி ரூ.45 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருக்கும். 1 கிலோ எடை கொண்ட துப்பாக்கியைத் தூக்கிப் பயிற்சி பெறுகிறேன். ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் பயிற்சி செய்வேன்.

பயிற்சியாளர் நல்லதம்பி, எனது தாத்தா ராஜீ, பாட்டி கலைச்செல்வி உள்ளிட்ட உறவினர்கள் ஊக்கம் அளிப்பது என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது'' என்கிறார் பா.யுக்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments