ராவணன் ஊரில் பட்டாசு வெடிப்பதில்லை!
ராமாயணத்தில் ராமர் கதாநாயகர். வில்லன் ராவணன் பண்டிதர் என்பதோடு, பிரம்மாவிடமிருந்து பல வரங்களைப் பெற்று, இலங்கையைக் கைப்பற்றியவர்.
ராமாயணத்தில் ராமர் கதாநாயகர். வில்லன் ராவணன் பண்டிதர் என்பதோடு, பிரம்மாவிடமிருந்து பல வரங்களைப் பெற்று, இலங்கையைக் கைப்பற்றியவர். அவர் பிறந்தது இந்தியத் தலைநகர் தில்லியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பிஸ்ராக் கிராமத்தில்தான்.
ராவணனின் தந்தை விஸ்ரவஸ், சிவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவருடைய மகன்கள் ராவணன், கும்பகர்ணன் ஆகிய இருவரும் பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து வரங்களைப் பெற்றனர். அதனை பயன்படுத்தியே இலங்கையை வென்றனர். ராவணன் அதன் மன்னனாக முடிசூடினார். இதனால் இலங்கையில் வசிப்பவர்களுக்கு 'விஸ்ரவர்கள்' என்ற பெயரும் ஏற்பட்டது.
வட மாநிலங்களில் நவராத்திரி நேரத்தில் ராம லீலா நடப்பதுண்டு. துர்காதேவி ராமருக்குப் போதிய ஆயுதங்களை அளித்து ஜெயிக்க வைத்தவள் என்பதால், நவராத்திரியின் முடிவில் ராம்லீலா நடத்தி ராவணன் தகனம் நடக்கும். ராவணன் இந்த ஊரில் பிறந்தவர் என்பதால், உள்ளூர் மக்கள் மகனை எரியூட்டுவார்களா? அதனால் அந்த விழா இங்கு கிடையாது.
Advertisement
Advertisement
அதோடு, ராவணனை வென்று விட்டு ராமர் நாடு திரும்பிய நாளே வட மாநிலங்களில் தீபாவளி. ராமன் வருகையை முன்னிட்டு வீதிகளில் அலங்கார விளக்குகள், வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி வாணவேடிக்கைகளை நடத்துவர்.
'எங்கள் ராவணனைக் கொன்றதற்கு விழாவா? வாண வேடிக்கையா?' என பிஸ்ராக் கிராம மக்கள் வாண வேடிக்கையை நடத்துவதில்லை. அன்று கிராமமே அமைதியாக இருக்கும். தங்கள் ஊர் நாயகனுக்காக ராம லீலா, வாண வேடிக்கை இல்லாமல் அமைதியாக இரு பண்டிகைகளையும் கொண்டாடுவது இவர்களின் சிறப்பு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.