முகப்பு
இளைஞர்மணி

ஏப். 23 வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் நேரலை...

Updated On : 24 ஏப்ரல் 2026, 12:24 pm IST
முன்னேற்பாடுகள் தீவிரம்..
பகிர்:

பூத் சிலிப் இல்லையா?

இந்திய தேர்தல் ஆணையம் வழங்கக் கூடிய வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) பெறாதவர்கள் கவலைப்பட வேண்டாம்.

https://electoralsearch.eci.gov.in வலைதளத்தில் கேட்கப்பட்டுள்ள உள்ளீடுகளைப் பதிவிட்டு, வாக்காளர் தகவல் சீட்டை எளிதில் பெறலாம்.

நோட்டா பொத்தான் எங்கு உள்ளது?

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பொத்தான் கடைசி விருப்பமாக உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

ஊடகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறை மூலம் புகார்களுக்கு தீர்வு: தேர்தல் ஆணையம்

மாநில ஊடகக் கட்டுப்பாட்டு அறையானது 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (DROs) மற்றும் 2 துணை ஆட்சியர்கள் உள்பட 15 பேர் கொண்ட குழுவுடன் இயங்கி வருகிறது.

இந்தக் குழுவினர் அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களைக் கண்காணித்து, தேர்தல் நடத்தை விதிகள் (MCC) மீறல், எதிர்மறையான அல்லது தவறான செய்திகள், வெறுப்புப் பேச்சு, கட்டணச் செய்திகள் (Paid News) மற்றும் பிற ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் குறித்துக் கண்காணிக்கின்றனர்.

இன்று(ஏப். 22) வரை, 437 சமூக ஊடகப் புகார்கள், 129 அச்சு ஊடகப் புகார்கள் மற்றும் 100 மின்னணு ஊடகப் புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன.

முதல் முறை வாக்காளர்களா?

முதல் முறை வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் பூத் ஸ்லிப் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

வாக்களிக்கச் செல்வோர் கவனிக்க.. 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23 வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது. வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன் கவனிக்க வேண்டிய சில முக்கிய தகவல்கள் பற்றி..

நாளை வாக்குப்பதிவு: விமானக் கட்டணம் பலமடங்கு உயர்வு!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான விமானக் கட்டணம் ஆயிரக்கணக்கில் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 4,000 - ரூ. 5,000 வரை இருக்கும் நிலையில் தற்போது ரூ. 14,000 வரை உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து 1,88,705 பேர் பயணம்!

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகளில் 1,88,705 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு (ஏப்.21) பயணம் செய்துள்ளனர்.

வாக்குச்சாவடி விவரங்களை அறிந்து கொள்ள...

https://electoralsearch.eci.gov.in இணைய முகவரி, Voter Helpline App அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்னை பயன்படுத்தி தங்களது வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வாக்குச்சாவடிக்குள் மொபைல், கேமரா, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி இல்லை.

நாளை வாக்குப் பதிவு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 21,000 காவல்துறையினர்!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் 21,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments