மகளிர்மணி

அடுப்பறை அலப்பறை....

'வர, வர சீரியல்கள் ரொம்ப போரடிக்குதுடி...'

இணையதளச் செய்திப் பிரிவு

'வர, வர சீரியல்கள் ரொம்ப போரடிக்குதுடி...'

'ஆமாம்டி... சண்டை போட மாமியார் இல்லைன்னா அப்படிதான் இருக்கும்...'

-அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி.



'என்னடி... தோசையில் பொத்தல், பொத்தலா இருக்கே?''

'அத்தே... அது ஜல்லடை தோசை..!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'பசி வந்திட பத்தும் பறந்து போகுமுன்னு சொல்லுவாங்களே... முதலாவது எதுடி...?'

'பர்ஸில் இருக்கிற பணம்தான்!'



'ஏன்டி... உங்க வீட்டில் நீ நின்னுகிட்டே சாப்பிடுறே?'

'குந்தி தின்றால் குன்றும் கரையும்னு பழமொழி தெரியாதா உனக்கு?'

-ரத்னம் மரகதம், கோவை.



'என்னங்க? நீங்களா கேட்பீங்கன்னு நினைச்சேன்... ஏன் அழுதேன்னு கேட்டீங்களா!'

'இல்லை... வெங்காயம் அரிந்ததாலே அழுதியோன்னு நினைச்சேன்..!'



'அத்தே... விஷயம் தெரியுமா? எதிர்வீட்டில் வீட்டோட மாப்பிளையா இருந்தவரு பிறந்த வீட்டுக்கே ஓடிப் போயிட்டாராம்!'

'எதுக்காம்..?'

'சொன்ன வேலை செய்யலைன்னு வேலைக்காரி திட்டினாளாம்..!'



'அம்மா... பெண்டாட்டிக்கு மட்டுமே பயந்த நான் இப்போ வேலைக்காரிக்கும் பயப்படுற மாதிரி ஆயிடுச்சி..!'

'என்ன ஆச்சு..?'

'வேலைக்காரி சொல்வதுதான் என் மனைவிக்கு வேதவாக்கு...'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வாழ்வைக் காதலிக்கிறேன்... எடின் ரோஸ்!

ரஜினி 173 படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

மெக்ஸிகோவில் GenZ போராட்டம்: காவல் துறையினருடன் மோதல்!

உதயநிதிக்கு ஆணவம் வேண்டாம்! - தமிழிசை

Big fan bro! சிம்புவின் இன்ஸ்டா பதிவு!

SCROLL FOR NEXT