FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சின்னதிரை

நடைபெற்று முடிந்த சீரியல் இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் ஓர் அணியிலிருந்தும் செயலாளர், பொருளாளர்கள் வேறு அணியிலிருந்தும் தேர்வாகி இருப்பதால், சங்கம் தொடர்ந்து சுமுகமாக இயங்குமா?

பகிர்:

நடைபெற்று முடிந்த சீரியல் இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் ஓர் அணியிலிருந்தும் செயலாளர், பொருளாளர்கள் வேறு அணியிலிருந்தும் தேர்வாகி இருப்பதால், சங்கம் தொடர்ந்து சுமுகமாக இயங்குமா? என்கிற குழப்பம் நிலவிவருகிறது.

தற்போதைய தலைவர் மங்கை அரிராஜன் தலைமையில் ஓர் அணி, கவிதா பாரதி தலைமையில் ஓர் அணி, ஆதித்யா, சுகன்குமார், விக்ராந்த் ஆகியோர் தலைமையில் தலா ஓர் அணி என ஐந்து அணிகள் களத்திலிருந்தன.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மங்கை அரிராஜனே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மங்கை அரிராஜன் அணி தலைவர் உள்ளிட்ட மூன்று பதவிகளையும், கவிதா பாரதி அணி செயலாளர், பொருளாளர் உட்பட ஆறு பதவிகளையும் கைப்பற்றியுள்ளது.

Advertisement

Advertisement

மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பின்னர் குஷ்பு நடத்தும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. புதிய அரங்கம், புதிய சுற்றுகள், சவால்கள் என பல புதுமைகளுடன் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.இந்த முறையும் மூன்று அணிகளுக்கு இடையிலான போட்டியாகவே இதனை உருவாக்கியுள்ளனர். கணவன் - மனைவி, நண்பர்கள் என எந்த உறவாக இருந்தாலும் ஓர் அணியாக இணைந்து இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள்

ரூ. 10 லட்சம் வரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. இதுதவிர, சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

பிக்பாஸ் சீசன் 10 -இல் கலந்துகொண்டவர் நடிகை ஆனந்தி. அவரது தந்தை சுப்பையா மாரடைப்பு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். தொடர்ந்து அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார். முன்னதாக இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் கடந்த வாரம் பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.

அதில் கலந்து கொண்ட ஆனந்தி ஏற்கெனவே மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேறுவது உறுதியாகி இருந்தது. இதற்கிடையில் நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடைபெற்றபோதே ஆனந்தியின் தந்தை இறந்தது குறித்த தகவல் வந்தது. அங்கு ஆனந்தியிடம் சொல்லாமலேயே நிகழ்ச்சியிலிருந்து அவசரமாக அவரை அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments