FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலக வரைபடம் மாறுகிறதா?

உலக வரைப்படத்தைத் திருத்த வேண்டும் என்கிற தீர்மானம், செப்டம்பர் 4-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேறியது.

12 செப்டம்பர் 2026, 9:52 pm IST
பகிர்:

ஆர்.எஸ்.

உலக வரைப்படத்தைத் திருத்த வேண்டும் என்கிற தீர்மானம், செப்டம்பர் 4-ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேறியது. இந்தியா உள்பட 164 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது.

உலகப் படத்தை ஏன் திருத்த வேண்டும்? இப்போதுள்ள உலகப் படம் பிழையானதா? இந்தக் கேள்விக்கு கிடைக்கும் பதில் - வரைபடத்தில் உள்ள சில நாடுகளின் அளவு அதன் உண்மைத் தோற்றத்துக்கு மாறாக உள்ளது என்பதே.

Advertisement

Advertisement

பூமி உருண்டையானது. இதில் உள்ள நாடுகளை தட்டையான வரைபடத்தில் குறிப்பிடும்போது, இயல்பாகவே சில மாறுபாடுகள் ஏற்படும். அத்துடன் இந்த வரைபடம் 1569-ஆம் ஆண்டு ஜெராடஸ் மெர்கேட்டர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் கடற்பயணங்கள். எந்த நிலப்பரப்பில் அல்லது கண்டத்தில் இருந்து மற்ற இடத்துக்கு எவ்வாறு செல்வது என்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டது.

இப்போது செயற்கைக்கோள்கள் மூலம் வானில் இருந்து உலக நாடுகளைப் பார்க்கும்போது வரைபடத்தில் பார்த்ததைவிட மாறுபட்டு இருப்பது தெளிவாகியுள்ளது. மெர்கேட்டர் வரைபடத்தில் கிரீன்லாந்தும் ஆப்ரிக்கா கண்டமும் ஏறக்குறைய ஒரே அளவில் காட்டப்பட்டுள்ளன.

ஆனால், நிஜத்தில், கிரீன்லாந்தைக் காட்டிலும் ஆப்ரிக்கா கண்டம் 14 மடங்கு பெரியது. இதேபோன்று கனடா, ஐரோப்பாவும் நிஜமான தோற்றத்தில் மாறுபடுகின்றன. இதையடுத்து வரைபடத்தைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

ஐ.நா.வில் புதிய வரைபடத்துக்கு ஆதரவு கிடைத்துள்ளபோதிலும், இந்த புதிய வரைபடம் கட்டாயமல்ல. அதை வைத்து உலக நாடுகள் தங்கள் எல்லைகளை மீண்டும் வரையறை செய்யாது.

இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா எதிர்க்கக் காரணம் உள்ளது. ஒரு நாட்டின் எல்லைகளை, புதிய பரப்புகளை வரைபடத்தைத் தீர்மானிப்பது ஐ.நா. வேலை அல்ல என்பதால் எதிர்க்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments