FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு 

2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

30 ஜனவரி 2024, 10:27 pm IST
பகிர்:

ஸ்டாக்ஹோம்: 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக திங்களன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர். 

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு சற்றுமுன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸின் ஜெரால்டு மௌரோ மற்றும் கனடாவைச்     சேர்ந்த பெண் விஞ்ஞானியான டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகிய மூவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.     

Advertisement

Advertisement

118 ஆண்டு கால் நோபல் பரிசு வரலாற்றில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் டோனா ஸ்ட்ரிக்லாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments