ஈரானில் நிலநடுக்கம்: 7 பேர் பலி
ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.
ஈரானில் உள்ள கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 7 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.
ஈரான் நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 440 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஈரான்-துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள கோய் நகரில் சனிக்கிழமை இரவு 9:44 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஏற்பட்டது. கோய் நகருக்கு தென்-தென்மேற்காக 14 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: திரிபுரா: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஈரானின் மேற்கு அஜர்பைஜான் நகரின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான கிழக்கு அஜர்பைஜானின் நகரின் தலைநகரான தப்ரிஸ் உள்பட பல நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.