FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பெய்ரூட் மீது தாக்குதல்! மக்கள் வெளியேற இஸ்ரேல் அறிவுறுத்தல்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

Updated On : 14 நவம்பர் 2024, 6:04 pm IST
பெய்ரூர் புறநகரில் தாக்குதலால் சூழ்ந்த கரும்புகை - AP
பகிர்:

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பெய்ரூட் விமான நிலையம் அருகே இஸ்ரேல் ராணுவம் இன்று (நவ. 14) நடத்திய வான்வழித் தாக்குதலில் அப்பகுதிகளில் இருந்த கட்டடங்கள் தரமட்டமாகின.

Advertisement

Advertisement

மக்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களுக்குச் சொந்தமான இடங்களைச் சுற்றியுள்ள மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்திருந்தது.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே,

ஹிஸ்புல்லா குழுக்களுக்குச் சொந்தமான இடங்களுக்கு அருகே இருப்பவர்கள் கவனத்திற்கு, கூடிய விரைவில் அப்பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கவுள்ளது எனக் குறிப்பிட்டு, வரைபடத்தில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களையும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தெற்கு பெய்ரூட் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

பெய்ரூட் விமான நிலையம் அருகே ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதிகளில் இருந்த கட்டடங்கள் முழுவதுமாக சேதமடைந்தன.

ஓடுபாதைகளில் விமானங்கள் சென்றுக்கொண்டிருக்கும்போதே ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இதில் விமானங்கள் அவசரமாகத் திருப்பப்பட்டன. சுற்றியிருந்த கட்டடங்கள் முழுவதுமாக தரைமட்டமாகின.

பெய்ரூட்டில் இஸ்ரேல் எல்லையிலிருந்து 3 கி.மீ. சுற்றளவிலுள்ள கட்டடங்கள் முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் மக்களுக்கு எதிரான ஹிஸ்புல்லாக்களின் மறைமுகத் தாக்குதலைத் தகர்க்கும் நோக்கத்தில் இஸ்ரேல் ராணுவம் இதனைச் செய்துள்ளது.

இதையும் படிக்க | 4000 பேருடன் இருக்கும் சுரங்கத்தின் வழியை அடைத்த தென்னாப்பிரிக்க காவல்துறை! காரணம் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments