FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

தெற்கு லெபனான் மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென இஸ்ரேல் எச்சரிக்கை!

தெற்கு லெபனான் பகுதியிலுள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

Updated On : 12 அக்டோபர் 2024, 5:21 pm IST
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் சேதமடைந்த கட்டிடங்கள் - Hassan Ammar
பகிர்:

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே மோதல் நடைபெற்று வரும் வேளையில் தெற்கு லெபனான் பகுதியிலுள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

”இஸ்ரேல் ராணுவத்தினர் உங்களின் கிராமங்கள் மற்றும் இருப்பிடங்கள் அருகிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் தங்குமிடங்களைக் குறிவைத்து வருகின்றனர். அதனால், மறு அறிவிப்பு வரும்வரை உங்களின் சொந்த பாதுகாப்புக்காக உங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென எச்சரிக்கிறோம்” என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்துள்ளார்.

பலமுனைப் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல், பாலஸ்தீனின் காஸாவுக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இன்று காலை, இஸ்ரேலிய அதிகாரிகள் காஸா அருகிலுள்ள ஷேக் ரவடான், தெற்கு ஜபாலியா முகாமிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலில் ராணுவப் பகுதிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

எதிரிகளான இஸ்ரேலிய ராணுவத்தினர் வடக்கு இஸ்ரேலில் குடியிருப்புகளைப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இஸ்ரேலின் திபெரியாஸ், ஹைஃபா, ஆக்ரே நகரங்களில் ராணுவப் பகுதிகளுக்கு அருகிலுள்ள மக்கள் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு ஹிஸ்புல்லா அமைப்பினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் தெற்கு லெபனானிலுள்ள ஐநா அமைதிப்படை தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் இரு அதிகாரிகள் படுகாயமடைந்ததாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் கொல்லப்பட்டு, 168 பேர் படுகாயமடைந்ததாகவும் லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் நேற்று (அக். 11) பேசுகையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலில் தற்போது வரை 2,229 பேர் கொல்லப்பட்டு 10,380 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments