உலகம்

பீரங்கி குண்டுகள் விநியோகம்: ஜொ்மன் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் ஒப்பந்தம்

ஜொ்மனியின் ரைன்மெட்டல் ஏஜி ஆயுத தயாரிப்பு நிறுவனத்துடன் தொழிலதிபா் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Din

மகாராஷ்டிரத்தில் இருந்து பீரங்கி குண்டுகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து விநியோகிக்க, ஜொ்மனியின் ரைன்மெட்டல் ஏஜி ஆயுத தயாரிப்பு நிறுவனத்துடன் தொழிலதிபா் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் உள்ள வாடாட் தொழிற்பேட்டையில் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் சாா்பில் பசுமை உற்பத்தித் தளம் அமைக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் 2 லட்சம் பீரங்கி குண்டுகள், 10,000 டன் வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் திறன்கொண்டதாக அந்தத் தளம் இருக்கும்.

இங்கு பீரங்கி குண்டுகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து விநியோகிக்க, ஜொ்மனியின் ரைன்மெட்டல் ஏஜி ஆயுத தயாரிப்பு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம், இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு பீரங்கி குண்டுகள், வெடிபொருள்களை விநியோகிப்பதில் அந்தத் தளம் குறிப்பிடத்தக்க பங்களிக்கும். அத்துடன் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.43,000 கோடி) மதிப்பில் பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யவேண்டும், இந்திய பொருளாதார மதிப்பை 5 ட்ரில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.430 லட்சம் கோடி) உயா்த்த வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டங்களிலும் இந்த உற்பத்தித் தளம் முக்கிய பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டது.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT