இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றடைந்த 10 டன் நிவாரணப் பொருள்கள்!
இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிட்வா புயலால் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவை கொழும்பு நகரை ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) சென்றடைந்தன.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கையில் கடந்த வியாழக்கிழமைமுதல் இன்றுவரை மழை, வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. 228 பேர் வெள்ளத்தில் மாயமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து, வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் “மேலுமொரு இந்திய விமானப் படையின் சி1307 விமானம் மூலம் சுமார் 10 டன் நிவாரணப் பொருள்களும் ஒரு மருத்துவக் குழுவும் கொழும்பு சென்றடைந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ள இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் கைகோத்துள்ளது. இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
10 tons of disaster response supplies, BHISHM Cubes and a medical team for on-site training & support has landed in Colombo
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.