FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி பலி!

உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி பலியானார்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 7:12 pm IST
நிர்மல் புர்ஜா
பகிர்:

உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி பலியானார்.

'நிம்ஸ் டாய்' என்றும் அழைக்கப்படும் நேபாளத்தை சேர்ந்த புகழ்பெற்ற மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா, 2019ஆம் ஆண்டில் உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் 189 நாள்களில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.

இவரது மலையேற்ற சாதனைகள் நெட்ஃபிளிக்ஸில் "14 Peaks: Nothing is Impossible" என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

நிர்மல் புர்ஜா தலைமையிலான மலையேற்ற குழு, வட பாகிஸ்தானில் உள்ள உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான 'பிராட் பீக்' சிகரத்தில் ஜூலை 30 அன்று ஏறத் தொடங்கினர். இந்த மலைச்சிகரங்களில் ஏற உலகில் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் வந்து செல்கின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து 8,047 மீட்டர் உயரத்தில் 'பிராட் பீக்' மலைச்சிகரம் அமைந்துள்ளது. இது உலகின் 12 ஆவது மிக உயரமான மலைச்சிகரமாகும். அங்கு அவ்வப்போது பலத்த மழையும் கடும் பனிப்பொழிவும் ஏற்படும்.

இந்தநிலையில், அங்கு நிகழ்ந்த எதிர்பாராத பனிச்சரிவில் சிக்கி நிர்மல் புர்ஜா உள்பட அவரது குழுவினர் 10 பேர் மாயமானதாகச் செய்திகள் வெளியானது.

இது குறித்து ’ஆல்பைன் கிளப் ஆஃப் பாகிஸ்தான்’ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'நிம்ஸ் டாய்' தலைமையில் சென்ற 10 பேர் அடங்கிய சர்வதேச மலையேற்ற குழு ஒன்று பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும், அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாயமானவர்களில் 6 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், 1 பாகிஸ்தானியர், 1 ஓமானி, 1 அமெரிக்கர் மற்றும் 1 சீன நாட்டவர் என்று தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருந்த நிலையில், நிர்மல் புர்ஜா பலியானதாக அவரது ‘எலைட் எக்ஸ்பெட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிர்மல் புர்ஜா உடல் உள்பட 6 பேரின் உடல்கள் மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

நிர்மல் புர்ஜா உயிரிழந்தது சர்வதேச மலையேற்ற வீரர்கள் சமூகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பல்வேறு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த அவர் என்றும் நினைவுக்கூரப்படுவார் என அவரைப் பின் தொடர்வோர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

summary

Renowned mountaineer Nirmal Purja killed after getting caught in an avalanche

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments