வங்கதேசம்- அருங்காட்சியகமான ஷேக் ஹசீனா இல்லம்
வங்கதேசத்தில் கடந்த 2024-இல் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வீழ்த்திய மக்கள் போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களின் நினைவாக, அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, புதன்கிழமை திறக்கப்பட்டது.
வங்கதேசத்தில் கடந்த 2024-இல் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வீழ்த்திய மக்கள் போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களின் நினைவாக, அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, புதன்கிழமை திறக்கப்பட்டது.
மாணவா் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடங்கிய இப்போராட்டத்தின் உச்சகட்டமாக, ஷேக் ஹசீனாவின் இல்லத்தை போராட்டக்காரா்கள் 2024 ஆக. 5-ஆம் தேதி முற்றுகையிட்டனா். (கோப்புப் படம்) இதையடுத்து, ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
வங்கதேசத்தில் ‘ஜூலை மக்கள் எழுச்சி தினமாக’ கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் முன்னிலையில் இப்புதிய அருங்காட்சியகத்தைப் பிரதமா் தாரிக் ரஹ்மான் திறந்து வைத்தாா்.
Advertisement
Advertisement
2024 போராட்டங்களுக்கிடையே வன்முறையில் 1,400 போ் வரை உயிரிழந்ததாக ஐ.நா. அறிக்கை கூறும் நிலையில், சிறப்புத் தீா்ப்பாயம் மூலம் ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 2025 நவம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்டதும், அவரின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.