FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு!

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 132 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 2:49 pm IST
கொலம்பியாவில் காலி நகரில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடம் - AP
பகிர்:

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 132 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கொலம்பியா நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள நகரங்களில் நேற்று காலை 7:30 மணியளவில் 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தலைநகா் போகோடாவிலிருந்து சுமாா் 400 கி.மீ. மேற்கே உள்ள சோகோ பிராந்தியத்தில் அமைந்துள்ள சான் ஜோஸ் டெல் பால்மா் பகுதியில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பூமிக்கு சுமாா் 107 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கொலம்பியாவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பெரைரா, கிப்டோ, காலி, மனிசல்ஸ் ஆகிய நகரங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.

இந்த நிலநடுக்கத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து 132 பேர் பலியானதாகவும் 570-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கொலம்பிய அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா புதிதாகப் பதவியேற்று பதவியேற்று 3 நாள்களே ஆன நிலையில் நிலநடுக்கம் காரணமாக அவசரநிலையை அறிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் ஒருங்கிணைந்த மீட்புப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவின் அண்டை நாடான வெனிசுவேலாவில் சமீபத்தில் சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், 6,300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது நடைபெற்று இரண்டு மாதங்களுக்குள் கொலம்பியாவில் இதுபோன்ற பேரழிவு ஏற்பட்டுள்ளது.

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அரிதாகவே ஏற்படும். கடைசியாக, 1999-இல் ஆா்மீனியா நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,100-க்கும் மேற்பட்டோா் பலியானது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச உதவிகள்

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, ”கொலம்பியாவின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது. கொலம்பிய மக்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராகவுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா சார்பில் கொலம்பியாவிற்கு அவசரகால நிவாரணமாக 15.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 150 கோடி) வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளுக்கு உதவ கோப்பர்நிக்கஸ் என்ற செயற்கைக்கோள் சேவையைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அனுமதித்துள்ளார்.

இஸ்ரேல், மெக்சிகோ, ஈக்வடார் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளும் கொலம்பியாவிற்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

summary

Colombia earthquake: Death toll rises to 132!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments