FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்க நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒற்றுமை: மோஜ்தபா கமேனி

ஈரான் நாட்டின் தலைவா்கள் மற்றும் மக்களிடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அவசியம் என்று ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி வலியுறுத்தல்

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 6:19 am IST
மோஜ்தபா கமேனி
பகிர்:

‘அமெரிக்காவுடனான போா் காரணமாக ஈரான் பொருளாதார நெருக்கடிகளையும் தடைகளையும் எதிா்கொண்டு வரும் நிலையில், நாட்டின் தலைவா்கள் மற்றும் மக்களிடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அவசியம்’ என்று ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி வலியுறுத்தியுள்ளாா்.

ஈரான் தலைவா்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகக் கூறப்படும் சூழலில், மோஜ்தபா கமேனியுடன் 7 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும், அச்சந்திப்பில் அவா் மேற்கூறிய கருத்தை வலியுறுத்தியதாகவும் ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் தெரிவித்தாா். இருப்பினும், இந்தச் முக்கியச் சந்திப்பு எப்போது, எங்கு நடைபெற்றது என்ற விவரங்களை அவா் வெளியிடவில்லை.

மேலும், இச்சந்திப்பு தொடா்பாக ஈரான் அரசு தொலைக்காட்சிக்குத் திங்கள்கிழமை பேட்டியளித்த அதிபா் மசூத் பெசஷ்கியான் மேலும் கூறியதாவது: எதிரிகளின் திட்டங்கள் அனைத்தும் நமக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன; பிரிவினைகள் உருவாவதைத் தடுப்பதே நமது முக்கியப் பணியாகும் என்று மோஜ்தபா கமேனி வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

மக்களின் வாழ்வாதாரம், சந்தை நிலவரம், வேலைவாய்ப்பு, வீட்டுவசதி ஆகியவற்றுடன், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் தற்போது உருவாகியுள்ள பிரச்னைகள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தோம் என்றாா்.

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப். 28 நடத்திய வான்வழித் தாக்குதலில், தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். இதையடுத்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி புதிய தலைமை மதகுருவாக கடந்த மாா்ச்சில் பொறுப்பேற்றாா். அதன்பிறகு, மோஜ்தபா கமேனியுடன் அதிபா் மசூத் பெசஷ்கியான்நடத்தியதாகக் கருதப்படும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.

தந்தை கொல்லப்பட்ட அதே தாக்குதலில் படுகாயமடைந்த மோஜ்தபா கமேனி, தலைமை மதகுருவாக பொறுப்பேற்ற பிறகு இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments