இலங்கை: இசை நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகளைப் போற்றி பாடல்! இளைஞர் கைது!
இலங்கையில் விடுதலைப் புலிகளைப் போற்றி பாடிய நபர் கைது செய்யப்பட்டது குறித்து...
இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகளைப் போற்றி பாடிய இளைஞர் ஒருவர் அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில், கடந்த மே 31 அன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயது பாடகர் ஒருவர் தமிழீழ போராளிக்குழுவான விடுதலைப் புலிகளைப் போற்றி பாடியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த பாடகரைக் கைது செய்த இலங்கை காவல் துறையினர் அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை 2 வார நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இருப்பினும், கைதான நபர் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து, யாழ்ப்பாண காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட 2 பாடல்களை விடுதலைப் புலிகளைப் போற்றும் வகையில் சித்தரித்து அந்த பாடகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, விடுதலைப் புலிகளை இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
A singer has been arrested by the police in Sri Lanka for singing a song praising the LTTE at a music concert.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.