வங்கதேசத்தில் தொடரும் தட்டம்மை பரவல்! 499-ஐ எட்டிய உயிர்ப் பலிகள்!
வங்கதேசத்தில் தட்டம்மை பாதிப்புகளுக்கு 499 பேர் பலியாகியுள்ளது குறித்து...
வங்கதேசத்தில், தட்டம்மை பரவலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில், தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருவதால், அந்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று (மே 22) காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தட்டம்மையால் மேலும் 11 குழந்தைகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வங்கதேசத்தில் தட்டம்மை பரவலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 54 பேருக்குத் தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,329 ஆக அதிகரித்துள்ளது.
இத்துடன், கடந்த மார்ச் 15 முதல் தட்டம்மை தொற்றால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 47,511 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், அவர்களில் 43,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கதேசத்தில் சுகாதாரம் பாதிக்கப்பட்டதற்கும், தட்டம்மை பரவலுக்கும், இடைக்கால ஆலோசகராகப் பதவி வகித்த முஹமது யூனுஸ்தான் காரணம் எனக் குற்றம்சாட்டி ஏராளமான ஆர்வலர்கள் கடந்த மே 13 அன்று போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
death toll from the measles outbreak in Bangladesh has risen to 499.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.