போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கா தாக்குதல்; 3 பேர் கொலை!
போதைப்பொருள் கடத்தியதாகக் கூறி படகு ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டது குறித்து...
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறி படகு ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முதலே, கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் வழியில் படகுகள் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக குற்றம் சாட்டிவரும் அமெரிக்கா தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு படகு மீது வெள்ளிக்கிழமை (மே 29) மற்றொரு தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் நடந்த மூன்றாவது தாக்குதலான இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
இது குறித்து அமெரிக்க ராணுவம், அந்தப் படகு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது என்றும், ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட அமைப்பால் அது இயக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்க ராணுவம் தரப்பில் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவின் இந்தத் தொடர் தாக்குதல்களால் இதுவரை, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Three people were killed in an attack carried out by the U.S. military on a boat in the Eastern Pacific Ocean, on allegations of drug trafficking.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.