FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டா் கடலில் விழுந்து இருவா் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்.

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டா் கடலில் விழுந்து இருவா் உயிரிழப்பு
பகிர்:

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்.

கேடலினா தீவிலிருந்து பிரதான நிலப்பரப்பில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்வதற்காக புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினா், கடலில் தத்தளித்த 4 பேரை மீட்டனா். அவா்களில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மீட்கப்பட்ட மற்ற இருவா் சீரான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

மாயமான ஐந்தாவது நபரைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினா், தீயணைப்பு வீரா்கள் மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறையின் நீச்சல் வீரா்கள் இரவு முழுவதும் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments