அமெரிக்காவில் பயிலும் மாணவர்களுக்கு புதிய சிக்கல்! விருப்ப பயிற்சிக் கட்டணம் ரூ. 67 லட்சம்!
அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் விருப்பப் பயிற்சி பெற 70,000 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என அமெரிக்கா பரிந்துரை செய்துள்ளது குறித்து...
அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் விருப்பப் பயிற்சி பெற்றுக்கொள்வதற்காக இனி கட்டணம் கட்ட வேண்டும் என்ற புதிய முன்மொழிவை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, அமெரிக்காவில் படிப்பை முடித்து அங்கேயே விருப்பப் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் 70,000 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 67 லட்சம்.
இதற்கு முன்பு இதற்காக 500 டாலர்கள் கட்டணமாக இருந்த நிலையில், அதனை உயர்த்த அமெரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்து வருகிறது. எச்-1பி விசா, மாணவர் விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களிலும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன
அந்தவகையில் அமெரிக்காவில் தங்கிப் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்காவிலேயே முதல்முறை விருப்ப செய்முறைப் பயிற்சி பெற 70 ஆயிரம் டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என அமெரிக்க நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவுகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் 24 மாத பணி பயிற்சி நீட்டிப்புக்கும் 30 ஆயிரம் டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்பயிற்ச்சிக்கு 500 டாலர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 31% இந்திய மாணவர்கள். இதனால் இந்த பரிந்துரை இந்திய மாணவர்களை பெருமளவில் பாதிக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Trump administration proposes Rs 67 Lakh OPT fee for international students
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.