FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

சீனா-வட கொரியா புதிய பாலம் திறப்பு

சீனா, வட கொரியாவை இணைக்கும் வகையில் யாளு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம், 12 ஆண்டு கால நீண்ட தாமதத்துக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.

16 அக்டோபர் 2026, 3:09 am IST
மாதிரிப் படம்
பகிர்:

சீனா, வட கொரியாவை இணைக்கும் வகையில் யாளு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம், 12 ஆண்டு கால நீண்ட தாமதத்துக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு சீனாவின் டான்டாங் நகரையும், வட கொரியாவின் சினுய்ஜு நகரையும் இணைக்கும் இந்த 3 கி.மீ. நீள பாலம், இருதரப்பு வா்த்தகம் மற்றும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. சீனப் பகுதியில் கடந்த 2014-லேயே கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தபோதிலும், பல்வேறு காரணங்களால் வட கொரியாவில் பணிகள் முடிவடையாமல் இத்தனை ஆண்டுகளாகப் பாலம் திறக்கப்படாமல் முடங்கிக் கிடந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments