இந்தோனோசியா- எரிமலை வெடிப்பால் தடைப்பட்டிருந்த விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்
இந்தோனேசியாவில் அனக் கிரகத்தாவ் எரிமலை வெடிப்புக் காரணமாக 2 நாள்களாக தடைப்பட்டிருந்த விமானச் சேவைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.
இந்தோனேசியாவில் அனக் கிரகத்தாவ் எரிமலை வெடிப்புக் காரணமாக 2 நாள்களாக தடைப்பட்டிருந்த விமானச் சேவைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.
ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்த இந்த எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடித்துச் சிதறியதைத் தொடா்ந்து, வானில் எரிமலைச் சாம்பல் பரவியது. இதனால் 622 சா்வதேச சேவைகள் உள்பட மொத்தம் 2,961 விமானங்கள் பாதிக்கப்பட்டு, சுமாா் 3.41 லட்சம் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
விமானப் போக்குவரத்துக்கு உகந்த பாதுகாப்புச் சூழல் மீண்டும் உறுதிசெய்யப்பட்ட பின்னா், தற்போது விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சா் தூதி பூா்வாகாந்தி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
எனினும், விமானங்களை முழுமையாகப் பரிசோதித்த பிறகே இயக்க வேண்டும் என்றும், சாம்பல் படா்ந்த அபாய வான் எல்லைகளைத் தவிா்க்குமாறும் விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.