ஈரான் அணுசக்தி விதிமீறல் விவகாரம்: உலக அரங்கில் வெடித்த புதிய மோதல்!
ஈரான் அணுசக்தி விதிமீறல் விவகாரம் தொடர்பாக, சர்வதேச அணுசக்தி முகமை ஐ.நா. பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது குறித்து...
அணுசக்தி விதிமீறல் மற்றும் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை மீறிய குற்றச்சாட்டு, அறிவிக்கப்படாத இடங்களில் கண்டறியப்பட்ட யுரேனியம் தடயங்கள் குறித்த நீண்டகால விசாரணைக்கு தெஹ்ரான் ஒத்துழைக்கத் தவறியதைக் காரணம் காட்டி, ஈரானை ஐ.நா. பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது சர்வதேச அணுசக்தி முகமை.
சர்வதேச அணுசக்தி முகமை, கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக ஈரானை ஐ.நா. பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரைத்துள்ளது உலக அரங்கில் புதிய மோதலை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் 35 நாடுகள் கொண்ட ஆளுநர்கள் குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 23 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஈரானின் நட்பு நாடுகளான ரஷியா, சீனா மற்றும் நைஜர் ஆகிய மூன்று நாடுகளின் உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர், எட்டு பேர் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தனர்.
Advertisement
Advertisement
இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முன்மொழிந்தன.
சாத்தியமில்லை
ஈரானை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு பரிந்துரைப்பது, அந்நாட்டின் மீது சாத்தியமான சர்வதேச பொருளாதாரத் தடைகள் மற்றும் சொத்து முடக்க நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், ஈரானின் நட்பு நாடுகளான ரஷியாவும் சீனாவும் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பதால், அவர்கள் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினால் ஈரான் மீது எந்தவொரு புதிய தண்டனை நடவடிக்கையையும் நிறைவேற்றப்படுவதற்கு சாத்தியமில்லை.
ஈரானிடம் ஆயுதங்கள் தயாரிக்கப்பதற்கு பயன்படும் 90 சதவீத செறிவூட்டலுக்கு நெருக்கமான அளவில், 60 சதவீத தூய்மையான 441 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த முகமையால் இந்த யுரேனியக் கையிருப்பின் நிலையைச் சரிபார்க்கவோ அல்லது பல அணுசக்தித் தளங்களை அணுகவோ முடியவில்லை என தெரிவித்துள்ளது.
நிலைமையை மேலும் மோசமாக்கும்
ஈரானை ஐ.நா. பாதுகாப்பு சபைக்குப் பரிந்துரைத்துள்ளது சட்டபூர்வமான அடிப்படையற்றது. இது நிலைமையை மேலும் மோசமாக்கும் நோக்கம் கொண்டது என ஈரான், சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கம்
தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்கானது மட்டுமே என்று மீண்டும் தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் ராணுவத் தாக்குதல்களே ஐ.நா ஆய்வாளர்கள் பாதுகாப்புடன் ஆய்வு செய்வதைத் தடுத்துள்ளதாகவும், சர்வதேச அணுசக்தி முகமை அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
The IAEA’s 35-member board approved the resolution by 23 votes to five, with eight abstentions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.