மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட பிரிக்ஸ் முறையாகப் பங்காற்ற வேண்டும்: சீன அதிபர்
மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட பிரிக்ஸ் நாடுகள் முறையான பங்கை ஆற்ற வேண்டும் என சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசியுள்ளார்.
மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட பிரிக்ஸ் (BRICS) நாடுகள் முறையான பங்கை ஆற்ற வேண்டும் என சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசியுள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உரையாற்றிய சீன அதிபர், மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிறுவ மற்ற உறுப்பு நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும் என்று தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் போர் காரணமாக மாறிவரும் சூழலால், அப்பகுதி மக்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இது சர்வதேச சமூக சர்வதேச நலன்களுக்கு உகந்தது அல்ல. அங்கு அமைதியை நிலைநாட்ட பிரிக்ஸ் நாடுகள் முறையான பங்களிப்பை வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் அனைத்துன் வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்க வேண்டும். பனிப்போர் மனப்பான்மை, தேசிய இறையாண்மையை மீறுவது மற்றும் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது போன்ற நடவடிக்கைகளை பிரிக்ஸ் உறுப்பினர்கள் எதிர்க்க வேண்டும்.
தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்க ஏஐ துறையில் பிரிக்ஸ் நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு தேவை.
இணையவெளி, விண்வெளி, ஆழ்கடல் போன்ற உலகளாவிய நிர்வாகத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பு முன்னிலை வகிக்க வேண்டும். அதேநேரம், குளோபல் சவுத் நாடுகளின் குரலை வலுப்படுத்த வேண்டும்.
உலகளாவிய நிர்வாகத்தை மிகவும் நியாயமாகவும், சமத்துவமானதாகவும் மாற்ற ‘ மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட சமூகமாக’ உருவாக்கவும் பிரிக்ஸ் கூட்டமைப்பு பாடுபட வேண்டும்” என்று தெரிவித்தார்.
Chinese President Xi Jinping has stated that BRICS nations must play a constructive role in establishing peace in West Asia.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.