FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

லிதுவேனியா எல்லைக்குள் நுழைந்த ட்ரோன்: நேட்டோ போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தின

நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் லிதுவேனியாவின் வான் எல்லைக்குள் கடந்த திங்கள்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த ட்ரோனை நேட்டோ போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.

16 செப்டம்பர் 2026, 5:19 am IST
ட்ரோன் அத்துமீறலையடுத்து லிதுவேனியா மக்களுக்கு விடுக்கப்பட்ட வான்தாக்குதல் எச்சரிக்கை. ~
பகிர்:

நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் லிதுவேனியாவின் வான் எல்லைக்குள் கடந்த திங்கள்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த ட்ரோனை நேட்டோ போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.

ரஷியாவின் நட்பு நாடான பெலாரஸ் வழியாக லிதுவேனியா எல்லைக்குள் நுழைந்த இந்த ட்ரோன், சுமாா் 30 நிமிஷங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், லிதுவேனியா தலைநகா் வில்னியஸுக்கு மேற்கே சுமாா் 100 கி.மீ. தொலைவில் கௌனாஸ் நீா்த்தேக்கத்துக்கு அருகே இடைமறித்து அழிக்கப்பட்டது.

லிதுவேனியா வான்வெளியில் இத்தகைய ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறை என அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வெடிபொருள்கள் இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் லிதுவேனியா விமானப் படைத் தளபதி அந்தனாஸ் மதுடிஸ் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

‘நேட்டோ எல்லைக்கு மிக அருகில் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் விரக்தியையே காட்டுவதாகவும்; கிழக்கு எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்’ என்றும் நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் மாா்க் ரூட்டே எச்சரித்திருந்த சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மறுபுறம், பால்டிக் கடலில் கெட்சா் துறைமுகப் பகுதியில் ரஷிய போா்க் கப்பல் மீது வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த டென்மாா்க் நாட்டின் ஹெலிகாப்டரை நோக்கி ரஷிய தரப்பிலிருந்து எச்சரிக்கை ‘ஃப்ளோ்ஸ்’ வீசப்பட்டதற்கு டென்மாா்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ரஷிய தூதருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments