மெத்தனால் கலந்த மதுபானத்தை அருந்திய 48 பேர் பலி!
நைஜீரியாவில் மெத்தனால் கலந்த மதுபானத்தை அருந்திய 48 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன
நைஜீரியாவில் மெத்தனால் கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் மதுபானத்தைக் குடித்த 48 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன
தெற்கு நைஜீரியாவின் ஒண்டோ மாகாணத்தில் 'மங்கி டெயில்' எனப்படும் அதிக ஆல்கஹால் கொண்ட பிரபலமான மூலிகை மதுபானத்தை அருந்திய பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதில், இதுவரை 48 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகின்றது.
182 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதில், மதுபானத்தில் அதிகளவு மெத்தனால் கலக்கப்பட்டதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
தற்போது பலியானோர் பற்றி அப்பகுதி அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “அவர்கள் அருந்திய மதுபானம் மிக வேகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை, அருந்தியவுடன் அவர்களது சிறுநீரகங்கள் செயலிழத்தல், பார்வையை இழத்தல் மற்றும் மூளை பாதிப்பு போன்றவை ஏற்படக்கூடும்” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒண்டோ மாநிலக் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு நைஜீரியா. அங்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபானத்தை அருந்துவது வழக்கமான ஒன்று. விலை குறைவாகக் கிடைப்பதால் அங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத் தேர்வாக இது உள்ளது. அதேநேரம், இதற்கு முறையான கட்டுப்பாடுகளும் கிடையாது.
மெத்தனால் கலந்த மதுபானத்தை அருந்தியவர்களில் முதல் பலி இரு வாரங்களுக்கு முன்பே பதிவானதாகவும், தொடர்ந்து பலரும் பலியாகி வருவதாகவும் அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் 'தேசிய உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டு முகமை' சிறிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் கொள்கலன்களில் விற்கப்படும் மதுபானங்களுக்கு நாடு முழுவதும் தடை விதித்துள்ளது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இவை எளிதில் கிடைக்கக்கூடியதாக இருப்பதன் காரணமாக இதுபோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
Reports indicate that 48 people have died in Nigeria after consuming methanol-laced alcohol.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.