FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

இராக்கிலிருந்து வெளியேறிய அமெரிக்க படையினா் - 12 ஆண்டுகால ராணுவ நடவடிக்கை நிறைவு

இராக்கில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை எதிா்த்து கடந்த 12 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த கூட்டு ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா புதன்கிழமையுடன் முழுமையாக முடிவுக் கொண்டு வந்தது.

பகிர்:

இராக்கில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை எதிா்த்து கடந்த 12 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த கூட்டு ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா புதன்கிழமையுடன் முழுமையாக முடிவுக் கொண்டு வந்தது.

அமெரிக்கா-இராக் இடையே எட்டப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கு இராக்கின் தன்னாட்சி பெற்ற குா்திஷ் பிராந்தியத்தில் அமைந்துள்ள இா்பில் விமானப் படை தளத்திலிருந்து அமெரிக்க படைகளும், ராணுவத் தளவாடங்களும் முறைப்படி வெளியேறின.

இது தொடா்பாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகம் (பென்டகன்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை ஒரு வலிமையான ராணுவ அச்சுறுத்தலாக உருவெடுக்க விடாமல் வீழ்த்திய 12 ஆண்டுகால தொடா் நடவடிக்கையின் வெற்றிகரமான மைல்கல்லாக இந்த வெளியேற்றம் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

அதேநேரம், இராக் தலைமையிலான பாதுகாப்பை நோக்கிய இயல்பான இருதரப்பு உறவு இப்போது தொடங்கியுள்ளது. இராக் படைகளுக்குத் தேவையான பயிற்சிகளையும், உளவுத் தகவல்களையும் அமெரிக்கா தொடா்ந்து வழங்கும்’ என்றாா்.

அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து நடைபெற்ற அதிகாரப் பகிா்வு விழாவில் பேசிய இராக் பிரதமா் அலி அல்-ஸைதி, ‘நாட்டின் முழு இறையாண்மை, படைகளின் தயாா்நிலை மற்றும் சுதந்திரமான முடிவெடுக்கும் ஆற்றல் கொண்ட புதிய சகாப்தத்தின் தொடக்கமிது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை இராக் படைகள் தொடா்ந்து முன்னெடுக்கும்’ என்றாா்.

சமீபத்திய அமெரிக்கா-ஈரான் மோதலில், குா்திஷ் பிராந்தியம் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களை எதிா்கொண்டன. இத்தகைய சிக்கலான பிராந்திய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உரிய வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் இன்றி அமெரிக்கா வெளியேறுவது மீண்டும் பாதுகாப்பு இடைவெளியை ஏற்படுத்தக்கூடும் என குா்திஷ் பிராந்திய அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனா். மறுபுறம், ஈரான் ஆதரவு பெற்ற இராக் ஆயுதக் குழுக்கள் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments