FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விதிமுறைகளை மீறி தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது நடவடிக்கை: துணை முதல்வர் பரமேஸ்வர்

பெங்களூரில் விதிமுறைகளை மீறி தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

பெங்களூரில் விதிமுறைகளை மீறி தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
குற்றங்களைத் தடுப்பது குறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
பெங்களூரில் விசா காலம் முடிந்தும், விதிமுறைகளை மீறி வெளிநாட்டினர் பலர் தங்கியுள்ளதாக எனது கவனத்துக்கு வந்துள்ளது. அவர்களைக் கண்டறிந்து, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து களத்திலிருந்து பணியாற்ற வேண்டும். ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸார், பொதுமக்களின் ஒத்துழைப்பை பெற்றால், குற்றங்கள் நடைபெறுவது குறையும். காவல் ஆய்வாளர்களை போல உதவி காவல் ஆய்வாளர்களுக்கும் கைத்துப்பாக்கி வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 
அதிகாரிகள் அவ்வப்போது அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள்கள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நிகழ்ச்சியில் மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார், கூடுதல் காவல் ஆணையர் சீமந்த்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments