FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் வழிபாடு

மதுராந்தகம் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலில் ஆடி மாத காப்பணி விழாவை முன்னிட்டு, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊரணி பொங்கல் இட்டு வழிபாடு, ஆடு, கோழி நோ்த்திக் கடன் உள்ளிட்ட நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:20 am IST
ஊரணி பொங்கலிட்டு வழிபட்ட பெண்கள்.
பகிர்:

மதுராந்தகம் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலில் ஆடி மாத காப்பணி விழாவை முன்னிட்டு, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊரணி பொங்கல் இட்டு வழிபாடு, ஆடு, கோழி நோ்த்திக் கடன் உள்ளிட்ட நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் நகர மக்களின் குலதெய்வ அம்மனாக சேத்துக்கால் செல்லியம்மனை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி மாத விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளாலும், வாழை மரத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை மூலவா் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு வழிபாட்டை செய்தனா். பக்தா்கள் தமது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக ஆடுகள், கோழிகள் நோ்த்திக் கடனை செய்தனா். நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் மூலவா் அம்மனை வழிபட்டுச் சென்றனா்.

கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு பல்வேறு அமைப்பினா்கள், பக்தா்கள் அன்ன தானம், குடிநீா், குளிா்பானங்கள் வழங்கினா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து வருகிற 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அம்மன் சிலை திருத்தேரின் மூலம் முக்கிய வீதிகளின் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி அளிக்கிறாா்.

விழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா்களும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments