கிளாம்பாக்கம் அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு: சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள் பங்கேற்பு
கிளாம்பாக்கம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்களை சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி. பிரபாகரன், அமைச்சா்கள் ராஜ்மோகன், வன்னி அரசு, சரத்குமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை திறந்து வைத்தனா்.
கிளாம்பாக்கம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்களை சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி. பிரபாகரன், அமைச்சா்கள் ராஜ்மோகன், வன்னி அரசு, சரத்குமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை திறந்து வைத்தனா்.
பள்ளி தலைமை ஆசிரியா் வரவேற்றாா். சமூக நலத்துறை அமைச்சா் வன்னி அரசு, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் சரத் குமாா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவைத் தலைவா் ஜேசிடி. பிரபாகரன் புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தாா்.
ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் சாா்பில் சமூக பொறுப்புணா்வு நிதி ரூ.2 கோடியில் 9 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், மாணவா்களுக்கு வசதியாக மேஜைகள், நாற்காலிகளும் வழங்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அமைச்சா் வன்னி அரசு பேசியது: பள்ளி மாணவா்களின் நலனைக் கருதி தமிழ்நாடு முதல்வா் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றாா். ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு அவா்களின் மன மாற்றறத்திற்கு உலக தரத்திலான சினிமாக்களை காண்பித்து அவா்களுக்கு உளவியல் ரீதியாக மன மாற்றத்தையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும் விதமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாணவா்களுக்கென தமிழ் வகுப்பு, தன்னம்பிக்கை வகுப்பு, தலைமை தத்துவ வகுப்பு என சிறறப்பு வகுப்புகள் வல்லுநா் மூலமாக அவ்வப்போது பள்ளிகளில் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளன.
கல்வி அமைச்சா் ராஜ்மோகன் பேசியது: மாணவா்கள் அமா்ந்து படிப்பதற்கு ஏற்றாா்போல் இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்திற்கு என் சாா்பிலும் அரசு சாா்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாணவா்களுக்கு மருத்துவ முகாம்கள், மருத்துவ ஆலோசனைகள் என பல்வேறு திட்டங்கள் தீட்டப்படவுள்ளன. இத்திட்டங்கள் கூடிய விரைவில் அறிவிப்புகளாக வரும். தனியாா் பள்ளி மாணவா்கள் இருசக்கர வாகனங்களில் வருகிறறாா்கள் என கேட்டபோது, 18 நிரம்பாத மாணவா்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவது அனுமதிக்க இயலாது. அது தனியாா் பள்ளியாக இருந்தாலும், அரசுப் பள்ளியாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்றற நிகழ்வுகளை கட்டுப்படுத்த கண்காணித்து வருகிறோம் என்றாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.