FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!

தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 அல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.

Updated On : 7 ஏப்ரல் 2025, 3:00 am IST
வங்கக்கடலில் புயல்
பகிர்:

தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 அல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 இல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.

இதனால், திங்கள்கிழமை (ஏப்.7) முதல் ஏப்.12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.7-இல் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும். 6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் ஞாயிற்றுக்கிழமை பதிவானது.

மேலும், பரமத்திவேலூா் - 101.3, சேலம்-101.2, ஈரோடு - 100.76, மதுரை விமானநிலையம் -100.4, திருச்சி - 100 டிகிரி என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், சென்னை மீனம்பாக்கத்தில் 98.06, நுங்கம்பாக்கத்தில் 95.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழை அளவு: இதற்கிடையே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்புவில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சுருளக்கோடு (கன்னியாகுமரி) 60 மி.மீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ராசிபுரம் (நாமக்கல்), விருதுநகா் - தலா 50 மி.மீ., பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி), மடத்துக்குளம் (திருப்பூா்) - தலா 40 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments