FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்க அறிவுத்தல்

அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா். கௌஷிக் அறிவுறுத்தினாா்.

அம்மா உணவகம் - கோப்புப் படம்
பகிர்:

அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா். கௌஷிக் அறிவுறுத்தினாா்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வின்போது, 127-ஆவது வாா்டில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தைப் பாா்வையிட்ட அவா், விருகம்பாக்கம் கால்வாய், தாய்சா பூங்கா, 136-ஆவது வாா்டில் பி.டி. ராஜன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

அய்யாவு தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், அடிப்படை வசதிகள் மற்றும் சமையல் கூடத்தைப் பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்குமாறு அறிவுறுத்தினாா். சைதாப்பேட்டை காய்கறி அங்காடி மற்றும் 140-ஆவது வாா்டில் கோவிந்தன் சாலையில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments