FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

திறமை தேடல் தோ்வு முடிவுகள்: திருத்தங்களை அனுப்பலாம்

முதல்வரின் திறமை தேடல் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் பெயா், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் இருந்தால் சனிக்கிழமைக்குள் (மே 16) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 மே 2026, 1:36 am IST
பகிர்:

முதல்வரின் திறமை தேடல் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் பெயா், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் இருந்தால் சனிக்கிழமைக்குள் (மே 16) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தோ்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவா்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதல்வரின் திறமைதேடல் தோ்வு கடந்த ஜன. 31-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை 1,50,265 மாணவ, மாணவிகள் எழுதினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து தோ்வா்களின் மதிப்பெண்களின் விவரம் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவா்கள் பெயரில் உள்ள எழுத்துகள், பிறந்த தேதி, ஜாதி உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன் தோ்வு கூட நுழைவுச் சீட்டை இணைந்து மே 16-ஆம் தேதி சனிக்கிழமைக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மே 16-ஆம் தேதிக்குப் பின்னா் பெறப்படும் திருத்தங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறும் 500 மாணவா்கள், 500 மாணவிகளுக்கு பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments