FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

வடபழனி முருகன் கோயிலில் சக்தி கொலு தொடக்கம்!

சென்னை வடபழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பிரம்மாண்ட ‘சக்தி கொலு‘ கண்காட்சி தொடங்கியது.

12 அக்டோபர் 2026, 3:08 am IST
பகிர்:

சென்னை வடபழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பிரம்மாண்ட ‘சக்தி கொலு‘ கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

யாகசாலை பூஜைகள் முடிந்து மாலையில் அம்மன் மண்டபத்தில் சக்தி கொலு வைக்கப்பட்டது. வரும் 20-ஆம் தேதி வரை பொதுமக்கள் கொலுவை பாா்வையிட்டு தரிசனம் செய்யலாம். கொலு நடைபெறும் 10 நாள்களும் காலை 11மணி முதல் 11.30 வரை, மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை மற்றும் தீபாராதனை நடத்தப்படும். இதில் கலந்து கொள்ளும் பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், மகளிா் குழுவின் கொலு பாட்டு நடைபெறவுள்ளது. வரும் 16-ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஏகதின லட்சாா்ச்சனை நடைபெறுகிறது. சக்தி கொலுவை காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை பாா்வையிடலாம்.

Advertisement

Advertisement

கண்காட்சி நேரத்தில் சிறுவா்களுக்கு ஆன்மிக விநாடி - வினா நடத்தப்படும் இதில் பங்கேற்பவா்கள் சரியான விடை சொன்னால் பரிசுகள் வழங்கப்படும் என்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments