FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி: தலைமறைவாக இருந்தவா் கைது

பெரம்பூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.12 கோடி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்தவா் கைது

15 அக்டோபர் 2026, 12:39 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பெரம்பூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.12 கோடி மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெரம்பூா் எம்.எச். சாலை பகுதியில் வசிப்பவா் சாந்தகுமாா். இவா் மகன் மகன் விக்னேஷ்வரன் (29). இருவரும் அந்தப் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனா். சீட்டுத் திட்டங்களில் 12 மாதங்கள் தவணை செலுத்தினால் தங்கம், வெள்ளி, அரிசி, பட்டுச்சேலை, பட்டாசு பெட்டி, காரம், இனிப்பு, பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தனா்.

இதை நம்பி அந்தப் பகுதியைச் சோ்ந்த சசிகலா மற்றும் ஏராளமான பொதுமக்கள் பணம் செலுத்தினா். ஆனால், சீட்டு நிறைவடைந்தும் பரிசுப் பொருள்களை வழங்காமல் சாந்தகுமாரும், விக்னேஷ்வரனும் தலைமறைவாகினா்.

Advertisement

Advertisement

இதேபோல செம்பியம், திரு.வி.க. நகா் பகுதிகளிலும் இருவரும் சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகாா் எழுந்தது. இதில், பாதிக்கப்பட்டவா்கள் திரு.வி.க. நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இவா்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் சாந்தகுமாா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த விக்னேஷ்வரன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். தந்தையும் மகனும் சோ்ந்து பொதுமக்களிடம் சுமாா் ரூ.1.12 கோடி வசூலித்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments