FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்ட்ரலில் பயணிகள் பாதுகாப்புக்கு ‘ட்ரோன்’ பயன்படுத்தத் திட்டம்

பண்டிகைக் காலங்களில் ரயிலில் பயணிக்க வரும் கூட்டத்தை கண்காணிப்பதற்காக, சென்ட்ரலில் ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

24 செப்டம்பர் 2026, 2:49 am IST
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.
பகிர்:

பண்டிகைக் காலங்களில் ரயிலில் பயணிக்க வரும் கூட்டத்தை கண்காணிப்பதற்காக, சென்ட்ரலில் ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

தெற்கு ரயில்வே மண்டலத்தில், ரயில்களில் பயணிப்பவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வரும் நிலையில், பயணிகள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரயில் நிலையங்களில் நடைமேடைகள், பயணிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையிலான நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைக்கால நேரங்களில் ரயில்களில் பயணிக்க வரும் கூட்டத்தை கண்காணிக்க ‘ட்ரோன்’ பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தெற்கு ரயில்வேயில் ஏற்கெனவே 10- க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் உள்ளதாகவும், அவற்றை இயக்குவதற்கான தொழில்நுட்பப் பயிற்சியை 50- க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் 3 ட்ரோன்கள் தயாராக உள்ளன. அவற்றை தீபாவளி உள்ளிட்ட பயணிகள் கூட்ட நெரிசலைக் கண்காணிக்க பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ட்ரோன்களை ரயில் நிலையத்துக்குள் பயன்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், வெளிப்புறத்தில் பயன்படுத்தவும் பரிசீலிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments