FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சுனாமியால் பாதிக்கப்பட்டவருக்கு : 14 ஆண்டுகளில் 6-ஆவது முறையாக வழங்கப்பட்ட மனைப் பட்டா!

கடந்த 14 ஆண்டுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவருக்கு 6-ஆவது முறையாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
சுனாமியால் பாதிக்கப்பட்ட சண்முகவேல் 6-ஆவது முறையாக பெற்ற வீட்டுமனைப் பட்டா. 
பகிர்:


கடந்த 14 ஆண்டுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவருக்கு 6-ஆவது முறையாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்த விவரம்: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்துக்குட்பட்ட கானத்துôர் ரெட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (51). இவருக்கு மனைவி, மூன்று மகள்கள், மகன் ஒருவர் என 6 பேரும் ரெட்டிக்குப்பத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2004, டிசம்பர் 26-இல் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர். அப்போது ராட்சத அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பின்பு ரெட்டிக்குப்பம் கடற்கரைப் பகுதியில் மண்ணுக்குள் புதைந்தார். அவரை, சுனாமிக்கு அடுத்த நாள் மீட்புக் குழுவினர் சுயநினைவில்லாத நிலையில் உயிருடன் மீட்டனர். அதன் பிறகு, சில ஆண்டுகள் தொடர் சிகிச்சையின் மூலம் சண்முகவேல் இயல்பு நிலைக்குத் திரும்பினார். 
சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக அரசு வீட்டுமனை, குடியிருப்பு கட்டி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சண்முகவேலுக்கும் காஞ்சிபுரத்தை அடுத்த மேல்கதிர்பூரில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அங்கு அவருக்கு கிராமத்தினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. 
இதனால், அவர் அப்பகுதியில் வசிக்க முடியவில்லை. இதையடுத்து, செய்யூர், முள்ளிப்பாக்கம், ரெட்டிக்குப்பம் ஆகிய பகுதிகளில் முறையே 5 முறை வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அப்பகுதிகளிலும் குடியிருப்புவாசிகள், ஆக்கிரமிப்பாளர்கள் ஆகியோரின் தொடர் எதிர்ப்பால் அப்பகுதிகளில் சண்முகவேல் குடியேறவில்லை எனக்கூறப்படுகிறது. 
அதோடு, மாவட்ட நிர்வாகத்தால் அடுத்தடுத்து வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, திரும்பப் பெறப்பட்டு வந்தன. இதனால், சண்முகவேல் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து உரிய இடத்தில் நிரந்தரமாக வசிக்க ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்து வந்தார். 
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்முகாமில் சண்முகவேல் பங்கேற்றார். அவர், திருப்போரூர் வட்டாட்சியருடன் ஆட்சியரை சந்தித்து மற்றொரு இடத்தில் வீட்டு மனை பெற வந்தார். 
அப்போது, சண்முகவேலுக்கு திருப்போரூர் வட்டம், மாம்பாக்கம் வருவாய் கிராமத்தில் குடியேறும் வகையில் 6-ஆவது முறையாக வீட்டுமனை பட்டா அளிக்கப்பட்டது. இதுகுறித்து மீனவ கூலித் தொழிலாளியான சண்முகவேல் கூறியது: 
கடந்த 14 ஆண்டுகளில் 5 இடங்களில் வீட்டுமனை பெற்றும், முறையாக அவ்விடங்களில் பல்வேறு பிரச்னைகளால் என்னால் வசிக்க இயலவில்லை. இந்நிலையில், நானும், எனது குடும்பத்தினரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். 
எனவே, தற்போது 6ஆவது முறையாக மாம்பாக்கத்தில் வீட்டுமனைப் பட்டா பெற்றுள்ளேன். அதோடு, பசுமை வீடு கட்டித் தரவும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். எனவே, தற்போது வழங்கப்பட்ட இந்த இடத்திலாவது நிரந்தரமாக வசிக்க மாவட்ட நிர்வாகம் ஆவன செய்யவேண்டும் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments