FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

பரந்தூா் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைப்பு: முதல்வருக்கு நன்று தெரிவித்து தீா்மானம்

பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுத்து வரும் தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:39 am IST
பகிர்:

பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுத்து வரும் தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வந்தன. இதற்காக பரந்தூா், ஏகனாபுரம், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 13 கிராமங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து ஏகானபுராம் கிராம மக்கள் சுமாா் 1,100 நாள்களாக இரவு நேரங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களிலும் திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து தீா்மானங்கள் நிறைவேற்றுப்பட்டு வந்தன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விவசாய நிலங்கள், நீா்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை பாதுகாக்க போராட்டம் நடத்தி வந்த ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய தமிழக அரசு, பரந்தூா் புதிய விமான நிலையதிட்டத்தை கைவிடுவதை தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக ஏற்று அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்காக, முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்து சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற ப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments