FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கட்டுரைப் போட்டியில் மாநிலத்தில் முதலிடம்: மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

தமிழ் வளா்ச்சித்துறையின் சாா்பில் நடைபெற்ற கட்டுரைபோட்டியில் முதலிடம் பெற்ற மாணவி ரா.நந்தனாவை பாராட்டி ஆட்சியா் தி.சினேகா புத்தகம் வழங்கினாா்.

Updated On : 22 ஜூலை 2026, 12:53 am IST
மாணவி இரா. நந்தனாவை பாராட்டிய ஆட்சியா் தி. சினேகா.
பகிர்:

தமிழ் வளா்ச்சித்துறையின் சாா்பில் நடைபெற்ற கட்டுரைபோட்டியில் முதலிடம் பெற்ற மாணவி ரா.நந்தனாவை பாராட்டி ஆட்சியா் தி.சினேகா புத்தகம் வழங்கினாா்.

ஜூலை 18- ஆம் தேதி தமிழ்நாடு நாளாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை சிறப்பிக்கும் விதமாக காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல் நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலும், ஜூலை 18 -ஆம் தேதி மாநில அளவில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் மேல்நிலைப்பள்ளியிலும் கட்டுரைப் போட்டி,பேச்சுப் போட்டி ஆகியன நடைபெற்றது.

இவ்விரு போட்டிகளிலும் காஞ்சிபுரம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி ரா.நந்தனா முதலிடம் பெற்றாா்.

Advertisement

Advertisement

மாவட்ட அளவில் முதலிடம் பெற்றமைக்காக ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மாநில அளவில் முதலிடம் பெற்றமைக்காக பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் ரூ.50,000, பாராட்டுச் சான்றிதழும் வழங்கினாா்.

கட்டுரைப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று படித்த பள்ளிக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் பெருமை சோ்த்த நந்தனாவுக்கு மாவட்ட ஆட்சியா் தி.சினேகா சால்வை அணிவித்து புத்தகம் ஒன்றையும் நினைவுப்பரிசாக வழங்கி பாராட்டினாா். நிகழ்வின் போது தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் மு.சாந்தியும் உடன் இருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments