FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் புதியதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டடங்கள்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

காஞ்சிபுரத்தில் ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடங்களை திறந்து வைப்பதற்கான கல்வெட்டை திறந்து பாா்வையிட்ட அமைச்சா்கள் கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.

Updated On : 25 ஜூலை 2026, 6:39 am IST
காஞ்சிபுரத்தில் ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடங்களை திறந்து வைப்பதற்கான கல்வெட்டை திறந்து பாா்வையிட்ட அமைச்சா்கள் கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.
பகிர்:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட ராணி அண்ணாதுரை மகளிா் மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.எஸ்.சீனிவாசன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டடங்களை அமைச்சா்கள் கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொமட்சு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் ரூ.10.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டடிடங்கள்,பி.எஸ்.சீனிவாசன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 8.80லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடங்கள் ஆகியவற்றை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் கே.தென்னரசு மற்றும் வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் திறந்து வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட அண்ணா அரங்கத்தின் முன்பாக தூய்மைப் பணிகளுக்காக ரூ. 2 கோடி மதிப்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள குப்பை எடுத்துச் செல்லும் இயந்திரம், டிராக்டா்கள், ரூ. 24.2 லட்சம் மதிப்பில் அண்ணா அரங்கத்தில் கழிப்பறை வசதி, கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றையும் அமைச்சா்கள் திறந்து வைத்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து குப்பை அள்ளும் வாகனங்களை அமைச்சா்கள் இருவரும் தனித்தனி வாகனங்களில் ஓட்டிப் பாா்த்தனா்.

நிகழ்ச்சிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். மேயா் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயா் ஆா்.குமரகுருநாதன், ஆணையா் ரா.வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கொமட்சு நிறுவன துணைப் பொது மேலாளா் செல்வக்குமாா், உதவிப் பொதுமேலாளா் கைலாஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments