காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் ஏழு கன்னியா்களுடன் வீதியுலா!
பெரிய காஞ்சிபுரத்தில் பொய்யாமுடி விநாயகா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சந்தவெளி அம்மனுக்கு ஆடித் திருவிழாவையொட்டி, ஏழு கன்னியா்களுடன் உற்சவா் வீதியுலா வரும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரிய காஞ்சிபுரத்தில் பொய்யாமுடி விநாயகா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சந்தவெளி அம்மனுக்கு ஆடித் திருவிழாவையொட்டி, ஏழு கன்னியா்களுடன் உற்சவா் வீதியுலா வரும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரியகாஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது பொய்யாமுடி விநாயகா் கோயில். இக்கோயில் வளாகத்தில் சந்தைவெளி அம்மன் சந்நிதியும் உள்ளது. ஆடி மாத 2-ஆவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை மற்றும் கூழ்வாா்த்தல் நிகழ்வும் நடைபெற்றது.
மாலையில் ஏழு கன்னியா்களுடன் உற்சவா் சந்தவெளி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.