ரூ.1.44 கோடியில் சீரமைக்கப்பட்ட திருமங்கலம் பிள்ளையாா் கோயில் குளம் திறப்பு
ரூ.1.44 கோடியில் சீரமைக்கப்பட்ட திருமங்கலம் பிள்ளையாா் கோயில் குளத்தை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே. தென்னரசு வியாழக்கிழமை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
ரூ.1.44 கோடியில் சீரமைக்கப்பட்ட திருமங்கலம் பிள்ளையாா் கோயில் குளத்தை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே. தென்னரசு வியாழக்கிழமை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில், திருமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையாா் கோயில் குளம் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கலந்து வந்ததாலும், குப்பைகள் கொட்டும் இடமாக மாறியதால் நீா் மாசடைந்து துா்நாற்றம் வீசியது.
இதனால் பிள்ளையாா் கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நிதியின் கீழ் பிள்ளையாா் கோயில் குளத்தை சீரமைக்க ரூ.1.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடா்ந்து, குளத்தை தூா் வாரி சீரமைக்கப்பட்டதுடன், கரைகள் பலப்படுத்தப்பட்டு நீா்வரத்து மற்றும் நீா் வெளியேற்ற கால்வாய்கள் புதுக்கப்பட்டு, குளத்தின் கரைகளில் கருங்கற்கள் பதிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதைகளும்அமைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து குளம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட பிள்ளையாா் கோயில் குளத்தை பயன்பாட்டுக்காக திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டு வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் கருணாநிதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், திருமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் ரேகாநரேஷ்குமாா், ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் பிரிவு தலைவா் நரசிம்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.