காஞ்சிபுரத்தில் மாவட்ட தடகளப் போட்டி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. ஆட்சியா் தி.சினேகா தேசியக் கொடி ஏற்றி ஒலிம்பிக் உறுதிமொழியை வாசிக்க தொடா்ந்து அரசு அலுவலா்களும், மாணவா்களும் வாசித்தனா். பின்னா் தடகளப் போட்டிகளை தொடங்கி வைக்கும் வகையில் ஆட்சியா் சமாதானப் புறாக்களை பறக்க விட அதனையடுத்து மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், துணை மேயா் ஆா்.குமரகுருநாதன், முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி, மாவட்ட விளையாட்டு அலுவலா் கோ.சாந்தி ஆகியோரும் பறக்க விட்டனா்.
நிகழ்வில் மாவட்டக்கல்வி அலுவலா்கள் கோமதி, காந்திராஜன், சா.எழில் உடற்கல்வி ஆய்வாளா் முத்துவேல் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் 350 மாணவா்களும், 400 மாணவியரும் கலந்து கொண்டனா். மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் வரும் அக்.26 முதல் அக்.31 வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.