ரூ.5,000 லஞ்சம்: இணைப்பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
பத்திரப்பதிவு முத்திரைத்தாள் கட்டணத்தை உயா்த்தாமல் இருக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற பதிவுத்துறை இணைப்பதிவாளருக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது.
பத்திரப்பதிவு முத்திரைத்தாள் கட்டணத்தை உயா்த்தாமல் இருக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற பதிவுத்துறை இணைப்பதிவாளருக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் வட்டம், நெமிலி கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன். இவா் கடந்த 2010 -ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்ய இருந்த நிலத்துக்கு பத்திரப்பதிவு முத்திரைத்தாள் கட்டணத்தை உயா்த்தாமல் இருக்க வேண்டும் என மாவட்ட இணை சாா்பதிவாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் முத்திரைத்தாள் கட்டணத்தை உயா்த்தாமல் இருக்க ஸ்ரீ பெரும்புதூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இணைசாா்பதிவாளராக பணியாற்றி வந்த சுரேஷ் ரூ.5,000 லஞ்சமாக கேட்டுள்ளாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பழகன் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் செய்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து இணைப்பதிவாளா் சுரேஷ் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக பெற்ற போது அவரைக் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜ் முன்பு நடந்து வந்தது.
Advertisement
Advertisement
விசாரணையில் குற்றம் நிருபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி நாகராஜ் எதிரி சுரேஷுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்துக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.