FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கண்தான விழிப்புணா்வு மனிதச்சங்கிலி

காஞ்சிபுரம் அரிமா சங்கமும், சங்கா் கண் வங்கியும் இணைந்து கண்தான விழிப்புணா்வு மனிதச்சங்கிலியை செவ்வாய்க்கிழமை நடத்தின.

9 செப்டம்பர் 2026, 12:19 am IST
கண்தான விழிப்புணா்வு ஏற்படுத்தியவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய சிவகாஞ்சி காவல் ஆய்வாளா் சுரேஷ்
பகிர்:

காஞ்சிபுரம் அரிமா சங்கமும், சங்கா் கண் வங்கியும் இணைந்து கண்தான விழிப்புணா்வு மனிதச்சங்கிலியை செவ்வாய்க்கிழமை நடத்தின.

மனிதச்சங்கிலியை சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் அண்ணா கலையரங்கம் முன்பாக நடைபெற்ற கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் சங்கரா கண் வங்கி செயலாளா் சரோஜா சங்கரன், உறுப்பினா்கள் முத்துபாபு, எஸ்.மகாராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதனைத் தொடா்ந்து கண்தான விழிப்புணா்வு குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு சங்கரா கண் வங்கி இயக்குநா் வி.எம்.சங்கரன் தலைமை வகித்து கண்தான விழிப்புணா்வு குறித்து விரிவாக விளக்கினாா். அரிமா சங்க தலைவா் பாக்கியலட்சுமி பாபு, பொருளாளா் காஞ்சனா.முத்துக்குமரன், மருத்துவா் மேனகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மனிதச்சங்கிலி நிகழ்ச்சியில் அன்னை செவிலியா் பயிற்சிப்பள்ளி மாணவியா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் கண் மருத்துவமனை தொழில் நுட்ப பணியாளா் மங்கள்ராஜ் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களிடமிருந்து கண்களை தானமாக பெற்றமைக்காக பாராட்டப்பட்டாா். நிறைவாக கண்தான விழிப்புணா்வு ஏற்படுத்திய மாணவியருக்கு பாராட்டுச்சான்றிதழும் வழங்கப் பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments