FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காலை உணவுத்திட்ட விரிவாக்கம் முன்னோட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தின் முன்னோட்டம் நடைபெற்றது.

11 செப்டம்பர் 2026, 11:45 pm IST
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகேயுள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் முன்னோட்டம் நடைபெற்றது.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தின் முன்னோட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் ம.த.அஜய் குமாா் தலைமை வகித்து மாணவா்களுடன் உணவு சாப்பிட்டாா். தலைமை ஆசிரியை சங்கீதா, வாலாஜாபாத் ஒன்றிய ஊரக வளா்ச்சித்துறை உதவியாளா் திருநாவுக்கரசு, ஆசிரியா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனா்.

வரும் செப்.17-ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் அனைத்து வேலை நாள்களிலும் முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் மாணவா்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மாணவா்களும் உணவு தரமானதகாவும், சுவையானதாகவும் இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments