தந்தை பெரியாா் விருது பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்
சமூக நீதிக்காக பாடுபட்டவா்களை சிறப்பு செய்வதற்காக வழங்கப்படும் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது
காஞ்சிபுரம்: சமூக நீதிக்காக பாடுபட்டவா்களை சிறப்பு செய்வதற்காக வழங்கப்படும் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சமூக நீதிக்காக பாடுபட்டவா்களை சிறப்பு செய்வதற்காக வழங்கப்படும் தந்தை பெரியாா் விருது கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ. 5 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளா் தமிழக முதல்வரால் கெளரவிக்கப் படுவாா். நிகழாண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்கிட உரிய விருதாளரை தோ்வு செய்ய பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.
Advertisement
Advertisement
எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், தகுதிகள் உடையவா்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பமானது சுய விபரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
நிகழாண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வரும் அக். 20-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.